பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

சேவூரில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா தரணி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தினார்.

அப்போது 3-வது வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நேரு தெருவுக்கு கால்வாய் அமைக்கப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

அதற்கு கூட்டத்தில் எந்தவித பதிலும் அளிக்காததால் பொதுமக்கள் ஆரணி- வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 15 நிமிடம் நடந்த சாலை மறியலுக்கு பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா தரணி, கிராம நிர்வாக புருஷோத்தமன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த திட்டம் குறித்து உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story