கோத்தகிரியில் குடியிருப்புகளுக்கு செல்லும் பழுதடைந்த நடைபாதையை தற்காலிகமாக சீரமைத்த பொதுமக்கள்


கோத்தகிரியில் குடியிருப்புகளுக்கு செல்லும் பழுதடைந்த நடைபாதையை தற்காலிகமாக சீரமைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T00:16:16+05:30)

கோத்தகிரியில் குடியிருப்புகளுக்கு செல்லும் பழுதடைந்த நடைபாதையை தற்காலிகமாக பொதுமக்கள் சீரமைத்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் குடியிருப்புகளுக்கு செல்லும் பழுதடைந்த நடைபாதையை தற்காலிகமாக பொதுமக்கள் சீரமைத்தனர்.

பழுதடைந்த நடைபாதை

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 5- வது வார்டில் அமைந்துள்ளது கல்பனா காட்டேஜ். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செங்குத்தான இடத்தில் அமைந்துள்ள இந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தால் பல ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்த நடைபாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டது. எனவே இந்த நடைபாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்காலிகமாக சீரமைப்பு

இதையடுத்து இப்பகுதி மக்கள் அந்த பள்ளத்தின் மேல் மரக்கட்டைகள், தகரத்தாலான கதவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு பள்ளத்தை மூடி அதன் வழியாக நடந்து சென்று வந்தனர். இரவு நேரத்தில் அதில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயங்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் தங்களது செலவில் இரும்புக் கம்பிகளை கொண்டு நடைபாதையை தற்காலிகமாக சீரமைத்தனர். மேலும் இந்த நடைபாதையை புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Next Story