குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்


குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்
x

குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்

தஞ்சாவூர்

குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோ.பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தஞ்சை ராஜன்:-வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். உதவித்தொகை வேண்டி மனு கொடுத்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனத்தில் வழங்கப்படும் வேலையின் நேரத்தை குறைக்க வேண்டும். பல மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த அளவே உதவித்தொகை வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பெயரில் வரும் தொகையை மற்றவர்கள் எடுப்பதையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆவின் பாலகம்

திருவையாறு கணேசன்:- வீடு இல்லாதவர்களுக்கு மட்டுமே வீடு வழங்க வேண்டும். ஏற்கனவே வீடு இருப்பவர்களும் வீடு இல்லை என கூறி புதிதாக வீடு வாங்குகிறார்கள். இதை தவிர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கு அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும். ஆவின் பாலகம் நடத்த அனுமதி பெற்று தர வேண்டும். இல்லையென்றால் புத்தகக்கடை வைக்க நிதிஉதவி செய்ய வேண்டும்.

நெடுவாக்கோட்டை ஜெகதீசன்:- நான் 75 சதவீத உடல் ஊனமுற்ற நிலையில் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே மின் மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story