சி.ஐ.டி.யூ. கார், வேன் ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் சி.ஐ.டி.யூ. கார், வேன் ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி கொட்டும் மழையில் சி.ஐ.டி.யூ.. கார், வேன் ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உடனடி அபராதம் என்கிற முறையை அரசு கைவிட வேண்டும். சட்டத்தின் பேரில் மோட்டார் தொழிலாளர்களை துன்புறுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story