சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) மற்றும் கரூர் மாவட்டக்குழு சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர்கள், செயல்திறன் ஊழியர்கள் மற்றும் செயல்திறன் அற்ற ஊழியர்கள், தட்டச்சர், தரவு உள்ளீட்டாளர், வரி வசூலர், இரவு காவலர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட 20 வகையான நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஒப்பந்த முறையை புகுத்தும் தமிழக அரசின் அரசாணை எண்.152-ஐ திரும்ப பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி, சுயஉதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், பி.எப்., இ.எஸ்.ஐ., 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.


Next Story