சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாடு


சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாடு
x
தினத்தந்தி 12 Sept 2022 12:30 AM IST (Updated: 12 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாடு நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஐ.டி.யு. 12-வது மாவட்ட மாநாடு ஓசூரில் நேற்று நடந்தது. ஓசூர் காமராஜ் காலனியில் ஆந்திர சமிதியில் நடந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நஞ்சுண்டன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து பேசினார். வரவேற்பு குழு செயலாளர் கிருஷ்ணப்பா வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐ.டி.யு. மாநில உதவி பொதுச்செயலாளர் வி.குமார், மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு ஆகியோர் மாநாட்டில் பேசினர். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர் உள்பட பலர் பேசினர்.

மாநாட்டில் முறைசாரா நல வாரியம் மூலம் சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி குறிப்பிட்ட கால அளவுகளில் நலவாரிய அட்டை வழங்க வேண்டும். ஓசூர் மத்திகிரியில் அரசு கால்நடை பண்ணையை சீரமைத்து அதிகளவில் மரங்களை நட்டு சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஓசூர் ரெயில் நிலையம் அருகில் இருந்து பேரணி நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.


Next Story