சி.ஐ.டி.யு. சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சி.ஐ.டி.யு. சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கழுகேர்கடை விலக்கு அருகே மதுரை மண்டல டாஸ்மாக் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து அதிகமான மதுபானங்கள் தினமும் லாரிகள் மூலம் வந்து இறக்கி வைக்கப்படும். பின்பு மதுரை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வேனில் ஏற்றி சப்ளை செய்யப்படும். இதில் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று சி.ஐ.டி.யு. தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சார்பில் குடோன் முன்பு ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழுகேர்கடை குடோன் கிளை செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். சுமைப்பணி தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டததில் மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகங்களே ஏற்று கூலி, இறக்கு கூலி உடனே வழங்கிடவும், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கிடவும், ஏற்று கூலி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story