சி.ஐ.டி.யு. தொழிற்சங்க வாயிற் கூட்டம்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்க வாயிற் கூட்டம் நடந்தது.
நாகர்கோவில்:
பொதுப்போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும், தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வுகால பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு.) குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு நேற்று வாயிற்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு சங்கர நாராயண பிள்ளை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் சிறப்புரையாற்றினார். துணைத் தலைவர் லியோ, நிர்வாகிகள் ஓய்வு பெற்றோர் நல அமைப்புச் செயலாளர் சுந்தரராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
இதேபோல் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பணிமனை சி.ஐ.டி.யு. செயலாளர் பொன் குமார் தலைமைதாங்கினார். பணிமனை உதவி செயலாளர் பகவதி அப்பன், மாநில துணைத்தலைவர் ஜான் ராஜன், சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவர் பொன்.சோபனராஜ் விளக்கி பேசினார். வாயிற்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகன், ரபிக் அகமது, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் பால்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.