சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பெறுதலில் உள்ள குறைபாடுகளை மிக துரிதமாக சரிசெய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான கேட்பு மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளில் இருந்து நிலுவைத்தொகையுடன் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், முறைசாரா உடல் உழைப்பு தொழிலாளர் அனைவருக்கும் வேலை உறுதிப்படுத்தும் திசைவழியில் மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைத்தலைவர் குமார், நிர்வாகிகள் முரசொலி, வெங்கடேசன், முருகன், ராஜி, சரசு, ஆனந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story