சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

வேளாண் விளை பொருட்களுக்கு 1½ மடங்கு ஆதார விலை வழங்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. விவசாய சங்கங்கள் சார்பில் டெல்லியில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்டக்குழு சார்பில் நேற்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story