சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனை முன்பு நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை கைவிட வேண்டும். பணியின்போது மரணம் அடைந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சட்டவிரோத வழித்தட நீட்டிப்பை கைவிட வேண்டும். புதிய பணி ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை கிளை தலைவர் காசிராஜன் தலைமை தாங்கினார். மத்திய சங்க துணை செயலாளர் மணி, பொதுச் செயலாளர் ஜோதி, துணை பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் ஜோன்ஸ் எட்வர்டு ஞானராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பழனி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.