சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x

விருத்தாசலம், திட்டக்குடியில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை 1-ல் போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியினை அரசு வழங்கவில்லை. இதை கண்டித்து விருத்தாசலம் போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யு.தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மண்டல துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வருங்கால வைப்பு நிதி வழங்காத தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

வடலூர்

இதேபோல் வடலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றை வழங்கவில்லை. இதை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் பணிமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நிர்வாகி உத்திராபதி தலைமை தாங்கினார், வடலூர் பணிமனை தலைவர் முருகன், செயலாளர் ஜான்விக்டர், துணை தலைவர் ஷர்புதின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திட்டக்குடி

திட்டக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வழங்காததை கண்டித்து சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் கடலூர் மண்டல தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் வரதராஜ், குமார், மணிவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story