சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்


சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்

கோயம்புத்தூர்

கோவை

குனியமுத்தூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் வடியாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலை மறியல் முயற்சி

கோவையில் நேற்று முன்தினம் மாலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை பெய்த கன மழையின் காரணமாக கோவையில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர், குறிஞ்சி நகர், வசந்தம் கார்டன், எஸ்.என்.ஆர். கார்டன், போன்ற பகுதிகளில் சாலைகளில் பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், தோண்டபட்ட குழிகள் மூடப்படாததாலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குனியமுத்தூர் பெட்ரோல் பங்க் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், மழை வந்தால் எங்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. தற்போது பெய்த மழையால் நாங்கள் மிகுந்த அவதிப்படுகிறோம். ஆகவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story