பல்பொருள் அங்காடியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறிபெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி


பல்பொருள் அங்காடியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறிபெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி
x

வேலூரில் பல்பொருள் அங்காடியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வேலூரில் பல்பொருள் அங்காடியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பல்பொருள் அங்காடி

வேலூர் தொரப்பாடி எழில்நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 31). இவர் சாய்நாதபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். கணேசிற்கு அதே பகுதியை சேர்ந்த வனஜா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப நண்பர்கள் மூலம் அறிமுகம் ஆனார். அப்போது அவர் வேலூரில் புதிதாக பல்பொருள் அங்காடி ஒன்று தொடங்க உள்ளேன். அதில், பங்குதாரராக சேர விருப்பம் இருந்தால் ரூ.20 லட்சம் கொடுத்து சேரலாம் என்று வனஜாவிடம் கூறி உள்ளார்.

அவர் இதுகுறித்து பைனான்சியர் கணவரிடம் தெரிவித்து சம்மதம் பெற்று வனஜா கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 3 தவணைகளில் ரூ.20 லட்சத்தை கணேசிடம் கொடுத்துள்ளார். சில மாதங்கள் கடந்த பின்னரும் பல்பொருள் அங்காடி தொடங்குவதற்கான எவ்வித வேலையும் கணேஷ் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

வியாபாரி கைது

இதையடுத்து வனஜா அவரிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்துள்ளார். அதனால் நம்பிக்கை இழந்த வனஜா அவர் கொடுத்த ரூ.20 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் கணேஷ் அதனை பல மாதங்களாகியும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுதொடர்பாக வனஜா வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் அவர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், கணேஷ் பல்பொருள் அங்காடியில் பங்குதாரராக சேர்ப்பதற்காக கூறி வனஜாவிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story