வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறிரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறிரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 151 பேரிடம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் 151 பேரிடம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டில் வேலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாரியம்மன் கோவில் சன்னதி தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாலகுமார்(வயது 30) மற்றும் சிலர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகாரில், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 151 பேரிடம் திருவண்ணாமலையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், சிங்கப்பூரில் சூப்பர்வைசர், எலட்ரீசியன், மெக்கானிக், டிரைவர், உதவியாளர் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி ரூ.1 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

தனிப்படை போலீசார் விசாரணை

அந்த புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின ்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

2 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை போத்தராஜா தெருவை சேர்ந்த அண்ணாச்சி மகன் பிரேம்குமார்(36) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு ஏஜெண்டாக இருந்த குத்தாலம் ஆர்.கே.நகரை சேர்ந்த மதியழகன்(40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.


Next Story