திருத்தணியில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்; 4 பேர் படுகாயம் - போலீஸ் விசாரணை


திருத்தணியில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்; 4 பேர் படுகாயம் - போலீஸ் விசாரணை
x

திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர்

திருத்தணியில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசினர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த மோதலில் 4 மாணவர்களுக்கு பலத்த காயம் அடைந்தனர்.

மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று செருக்கனூர் கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், டி.சி.கண்டிகை கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனை பயங்கர மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை அறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.


Next Story