வீட்டில் பந்து விழுந்ததால் மோதல்; 2 பேர் கைது


வீட்டில் பந்து விழுந்ததால் மோதல்; 2 பேர் கைது
x

வீட்டில் பந்து விழுந்ததால் மோதல் ஏற்பட்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 49). விவசாயி. அதே பகுதியில் வசிக்கும் வெங்கடாசலத்தின் மகன் அறிவுமணி(28). இவர் நேற்று முன்தினம் கம்பம் பெருமாள் கோவில் திடலில் தனது நண்பர்களுடன் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டின் குளியல் அறையில் பந்து விழுந்துள்ளது. இது பற்றி பன்னீர்செல்வம், அறிவுமணியிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீசில் இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் பன்னீர்செல்வம் மற்றும் அறிவுமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story