கோவில் விழா ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்


கோவில் விழா ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 25 Jun 2023 10:58 PM IST (Updated: 26 Jun 2023 1:19 PM IST)
t-max-icont-min-icon

உளியநல்லூர் கிராமத்தில் கோவில் விழா ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதி கொண்டனர்

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலியை அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக அக்னி வசந்த விழா நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாளான இன்று துரியோதன் படுகளம் நிகழ்ச்சியும் தீமிதி விழாவும் நடைபெற்றது.

முன்னதாக காலை 11 மணியளவில் கோடம்பாக்கம் வழியாக ஜலம் (தண்ணீர்) கொண்டுவரும் நிகழ்ச்சியின்போது தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வருவாய்த்துறையினர் விரைந்து சென்று இருதரப்பினரையும் சமரசபடுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story