திருவெண்ணெய்நல்லூர் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 7 போ் கைது


திருவெண்ணெய்நல்லூர் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 7 போ் கைது
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 போ் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் பெருமாள் (வயது 35). இவர் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல சீட்டு பணம் வசூல் செய்து வைத்துள்ளார். இந்த பணத்தில் முருகன் கோவில் அருகில் சிமெண்டு களம் அமைக்கலாம் என்று முடிவு செய்தார். இதற்கு அதே ஊரை சேர்ந்த பழனி மகன் பிரவின்குமார் (33) என்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் பொருமாள் தரப்பிற்கும், பிரவின்கமர் தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் பிரவின்குமார், பிரேம்குமார் செந்தில்குமார், வேலாயுதம், ராம்குமார், பிரசாந்த், பழனி ஆகியோர் மீதும், பிரவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில் வசந்தா, வீரபத்திரன், கிருபாபுரி, பெருமாள், முருகன் ஆகியோர் மீதும் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார், பிரேம்குமார், செந்தில்குமார், ராம்குமார், வீரபத்திரன், கிருபாபுரி, பெருமாள் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story