10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்
x
தினத்தந்தி 15 Jun 2022 7:41 AM GMT (Updated: 15 Jun 2022 7:55 AM GMT)

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கியது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆனது ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் 17-ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.


Next Story