11,12-ஆம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு


11,12-ஆம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
x

11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளில், மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம்11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதனை தொடர்ந்து மறு கூட்டல் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளில் மறு கூட்டல், மறு மதிப்பீடுக்கான முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீடு வேண்டி விண்ணப்பித்தவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களை பயன்படுத்தி மறுகூட்டல், மறு மதிப்பீட்டின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


Next Story