கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி சாவு


கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி சாவு
x

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

8-ம் வகுப்பு மாணவி

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த எர்ணாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் ஜெய் ஸ்ரீகா (வயது 13). 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக செவ்வாப்பேட்டை அடுத்த புஜன் கண்டிகை பகுதிக்கு நேற்று மாலை வந்தார். இந்த நிலையில் ஜெய் ஸ்ரீகா திருமண நிகழ்ச்சிக்காக வந்த வீட்டின் அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கை கழுவுவதற்காக கிருஷ்ணா கால்வாய் அருகில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கால் தவறி நீரில் விழுந்து வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார்.

சாவு

இதை பார்த்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறிப்போய் சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் சிறுமி கால்வாய் நீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story