முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சாந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.ராஜன், தமிழ்த்துறை தலைவர் நிர்மலா ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை தலைவர் மனோகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story