கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்


கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோயம்புத்தூர்

கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ரூ.32 கோடியில் பணிகள்

கோவை நகரில் ரூ.32 கோடி மதிப்பிலான சாலை பணிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் 13 இடங்களில் ரூ.32.78 கோடி மதிப்பிலான திட்டபணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கடந்த காலத்தில் புதுபிக்கப்படாத சாலைகள் போடப்பட்டு உள்ளது. 100 வார்டுகளுக்கும் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து ரூ.193 கோடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களிடம் நேரில் பெறப்பட்ட மனுக்களில் ரூ.30 கோடியில் பணிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

ஒட்டு மொத்தமாக கோவை மாநகராட்சியில் மட்டும் 2 ஆண்டுகளில் ரூ.223 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.

செம்மொழி பூங்கா

120 கிலோ மீட்டர் தொலைவிற்கான பணிகளுக்கு முதல்- அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குறுகிய காலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு சாலை பணிகள் நடப்பது இதுவே முதல் முறை, இடையர் பாளையம் - தடாகம் சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை தொடங்க விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும், இதுவரை இல்லாத கோவை மாவட்ட வளர்ச்சிக்கான ரூ.9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரெயில், ஐடி பார்க், டெக் சிட்டி, செம்மொழி பூங்கா, எழில் மிகு கோவை திட்டம் என பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வரும்

மானிய கோரிக்கையின் போது மேலும் பல திட்டங்கள் வர உள்ளது. கோவை மீது அக்கறை கொண்டு முதல்- அமைச்சர் திட்டங்களை வழங்கி வருகிறார். முதல்- அமைச்சர் அறிவித்தது போல 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வரும் வகையில் வடிவ மைப்புகள் நடந்து வருகிறது.

விரைவில் நிதியை பெற்று பணிகள் தொடங்கும். செம்மொழி பூங்கா ஒரு பகுதி பணிகள் தற்போது தொடங்கும். மத்திய சிறை மாற்றப்பட்ட பிறகு ஏனைய பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story