தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 2 Jun 2023 1:00 AM IST (Updated: 2 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர்

சுவாமிமலை அருகே ஏழுமாந்திடல் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தில் தூய்மை மற்றும் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதை கலெக்டர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்வோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி, உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், அய்யப்பன், சிவக்குமார், பணி மேற்பார்வையாளர் பாரதி, ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் துரை கார்த்திகேயன் செய்திருந்தார்.


Next Story