தூய்மை பணி


தூய்மை பணி
x

தென்காசியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தென்காசி

தென்காசி பஞ்சாயத்து யூனியன் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த கிராமத்தில் கிடந்த குப்பைகளை ஒட்டுமொத்தமாக பணியாளர்கள் அகற்றினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், பழனிவேல், பஞ்சாயத்து துணைத் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் வேம்பையா மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story