தூத்துக்குடி கடற்கரையில் தூய்மை பணி


தூத்துக்குடி கடற்கரையில் தூய்மை பணி
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தூய்மை பணி நடந்தது.

தூத்துக்குடி

உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை மூலமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களில் உள்ள கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படுகிறது.

அதன்படி நேற்று தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை தேசிய பசுமை படை மாணவர்கள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி நகர் பகுதியில் உள்ள 5 பள்ளிகளில் இருந்து மொத்தம் 250 மாணவர்கள், 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தூய்மைப்படுத்தும் பணியை தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூய்மைப்படுத்தும்போது கிடைக்கப்பெற்ற கழிவு பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள், தூக்கி எறியப்பட்ட மீன்வலைகள், கண்ணாடி துண்டுகள், பேப்பர், ரப்பர், மரக்கட்டை, உலோகங்கள், கிழிந்த துணிகள், மருத்துவக்கழிவு பொருட்கள் போன்றவற்றை தரம் வாரியாக பிரித்து தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களிடம் கொடுக்கப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் கிரீன் பெல்லோ உறுப்பினர் ராகினி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் முரளி, ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.

1 More update

Next Story