நூலகத்தில் தூய்மை பணி


நூலகத்தில் தூய்மை பணி
x
தினத்தந்தி 23 Aug 2023 4:00 AM IST (Updated: 23 Aug 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே நூலகத்தில் தூய்மை பணி நடந்தது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் சமுதாயக்கூடத்தை ஒட்டி நூலகம் உள்ளது. இந்த நூலகத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடந்தது. மேலும் நூலக மேற்கூரை பழுதடைந்து, உள்ளே மழைநீர் கசிந்தது. இதனால் புத்தகங்கள் நனையும் நிலை இருந்தது. மேலும் மின் இணைப்பு இல்லாததால் நூலகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் வாசகர்கள் அவதியடைந்தனர். இதனால் நூலகத்தை பராமரித்து, வாசகர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நூலகத்தை சுற்றி உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும் மேற்கூரையை சீரமைத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

1 More update

Next Story