தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
பட்டுக்கோட்டையில் தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி சார்பில் தூய்மையே சேவை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் குமரன், என்ஜினீயர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. போட்டியை உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் வழி நடத்தினர். இதில் சுகாதார அலுவலர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர்கள் அறிவழகன், மகாமுனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாதுரை, அய்யாபாலு அரவிந்த், தொண்டு நிறுவன ஆளுனர் வீரப்பன், ஆலயம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 24 பேருக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.