முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டம்
x

வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்.

திருப்பூர்

காங்கயம்,

காங்கயம் அருகே வருகிற 24-ந் தேதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்.

மேடை அமைக்கும் பணி

காங்கயம் அருகே உள்ள படியூரை அடுத்த தொட்டியபாளையத்தில் வருகிற 24-ந்தேதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசுகிறார்.

அதற்காக தொட்டியபாளையத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அங்கு சென்று தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


-


Next Story