மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
மதுரையில் நிறுவப்பட்டுள்ள மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தடைந்தார்.
இந்த நிலையில் மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story