பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சி.எம்.டி.ஏ. 27 திட்டங்களுக்கு ஒப்பந்தபுள்ளி -நிதி ஒப்புதல்; அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சி.எம்.டி.ஏ. 27 திட்டங்களுக்கு ஒப்பந்தபுள்ளி -நிதி ஒப்புதல்; அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
x

சி.எம்.டி.ஏ. சார்பில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 27 திட்டங்களுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, நிதி ஒப்புதல் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை

சென்னை சி.எம்.டி.ஏ. அலுவலக கூட்டரங்கில் குழும கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில், 2023-2024-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 27 திட்டங்களுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, நிதி ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் அமைப்பதற்கு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களை பரிசீலிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள், செயல்படுத்தப்பட இருக்கும் பணிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி எஸ்.முருகன், எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் வெங்கடேஷ், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் பொ.சங்கர், நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story