Normal
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் புதுக்கோட்டையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் பல ஆண்டுகளாக செயலாளர் பதவி உயர்வு வழங்காமல் பணிபுரியும் பணியாளர்களுக்கு உடன் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story