கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது

திருநெல்வேலி

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் . சங்க இணை செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கர சதாசிவம் முன்னிலை வகித்தார்.

கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கைகள் குறித்து உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். வங்கிகளில் பணியிடங்களை முறையான பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். 2015-ம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட உதவியாளர்களுக்கு பணிமூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசு விவசாய கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கி வந்த 2 சதவீத வட்டி உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க இணை செயலாளர் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story