ஊதிய உயர்வு வழங்கிட கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் வேண்டுகோள்


ஊதிய உயர்வு வழங்கிட கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் வேண்டுகோள்
x

ஊதிய உயர்வு வழங்கிட கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கவுரவ பொதுச் செயலாளர் குப்புசாமி, பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்கங்களில் எம்.எஸ்.சி. ஏ.ஐ.எப். திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் விவசாய உபகரணங்கள் மற்றும் பிற சேவைகளின் மூலம் லாபம் ஈட்டும் இடங்களில் மட்டும் அந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நஷ்டம் அடையக்கூடிய இடங்களில் இந்த திட்டத்தினை தமிழக அரசு, கூட்டுறவுத்துறை கைவிட வேண்டும். சங்கங்களில் பதவி உயர்வு வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து அமைக்கப்பட்ட இருவேறு கமிட்டியினை மாற்றி அமைத்து, புதிதாக ஒரே கமிட்டி அமைப்பின் கீழ் மாறுதல் செய்து கமிட்டி அறிக்கையினை விரைந்து பெற்று, சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயா்வு வழங்கிட பதிவாளர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பணியாளர்கள் பணி ஓய்வு பெறும் நாளில் உள்ள சிரமங்களை களைய வேண்டும். சங்கங்களின் தணிக்கையினை பட்டய தணிக்கைக்கு மாற்றி தர வேண்டும். சங்கங்களின் பணி வரன்முறை செய்யாத பணியாளர்கள் பணியின் போது இறந்து விட்டால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் நியமனம் செய்வது குறித்து பதிவாளரின் மூலம் தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்றார். முடிவில் மாவட்ட தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story