கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்


கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்
x

கரூர் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

கரூர்

கரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பிரபுசங்கர் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கோ-ஆப்டெக்சில் இந்தாண்டு தீபாவளிக்கு புதிய வடிவமைப்புகளில் அசல் பட்டுடன் கூடிய சேலம் பட்டு புடவைகள் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, துணை மண்டல மேலாளர் சுப்ரமணியன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story