தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு படை போலீசார் ஒத்திகை


தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு படை போலீசார் ஒத்திகை
x

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக கடலோர பாதுகாப்பு படை போலீசார், சாகர் கவச் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, மத்திய அரசு கடலோர மாவட்டங்களில் ஆப்ரேஷன் ஆம்லா மற்றும் சாகர் கவாச் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 2 முறை இந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக கடலோர பாதுகாப்பு படை போலீசார், சாகர் கவச் ஒத்திகையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது.

தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்பவனோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று, மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் படகை சோதனை செய்தனர். முத்துப்பேட்டை நகர்ப்பகுதிகளிலும் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story