சேவல் சண்டை சூதாட்டம்
சேவல் சண்டை சூதாட்டம்
கோவை
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பச்சாபாளையம், வெண்ணைக்காரர் தோட்டம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குரும்பபாளையம் கிரன் (வயது 24), சதீஷ் (26) தினேஷ் (20) ஜெயச்சந்திரன் ( 45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்களும், சூதாட பயன்படுத்தப்பட்ட 400 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல மதுக்கரை அறிவொளி நகர் அண்ணா சதுக்கம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக செந்தமிழ் நகரை சேர்ந்த பாபா (28), ஜெயராம் நகர் பூபதி (23), எம்.ஜி.ஆர். நகர் தாமரைச்செல்வன் (37), போத்தனூர் ஹரிஹரசுதன் (23), பேரூர் சக்தி (வயது 20), அறிவொளி நகர் பாலா ( 24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 சேவல்களும் சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ.3,500-ம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.