தேங்காய் உடைக்கும் போராட்டம்.
வெள்ளகோவில் கடைவீதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம்.
திருப்பூர்
வி.மேட்டுப்பாளையம்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனைஇளைஞர் அணி சார்பில் வெள்ளகோவில் கடைவீதியில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் மாநில அவைத்தலைவர் என்.டி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
ரேசன்கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் வழங்கப்படுவதற்கு பதிலாக அதிக சத்துக்கள் நிறைந்த தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்றும், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்றும், கொப்பரை தேங்காய் விலையை 140 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க முயற்சி எடுக்காத தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவும்இந்த சிதறு தேங்காய் போராட்டம் நடத்துவதாக அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story