தேங்காய் விலை உயருமா?தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு


தேங்காய் விலை உயருமா?தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
திருப்பூர்


குடிமங்கலம் பகுதியில் தேங்காய் விலை உயருமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தென்னை விவசாயம்

குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. குடிமங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.

தேங்காயை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி கொப்பரை உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. குடிமங்கலம் பகுதியில் மட்டும் 100-க் கும் மேற்பட்ட கொப்பரை தேங்காய் உற்பத்தி களங்கல் உள்ளன.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேங்காய் உற்பத்தி அதிகரித்த நிலையிலும் விலை குறைந்து காணப்படுகிறது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

விலை உயருமா?

தென்னை சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குடிமங்கலம் பகுதியில் கிணற்றுபாசனம் மூலம் சொட்டு நீர் அமைத்து தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பராமரிப்பு செலவு குறைவு, நிரந்தர வருமானம், குறைந்த அளவு கூலியாட்கள் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆண்டுக்கு சராசரியாக ஒரு தென்னை மரத்தில் இருந்து 250 முதல் 300 தேங்காய்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையிலும் கொப்பரைவிலை குறைந்து காணப்படுகிறது.

ஒரு டன் தேங்காய் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே விற்பனை ஆகிறது. கடந்தபல மாதங்களாக விலை குறைந்திருந்த கொப்பரை தேங்காய் விலை சற்று உயர்ந்து தற்போது ஒரு கிலோ கொப்பரை ரூ.92 வரை விற்பனை ஆகிறது. இப்பகுதிகளில் மழை பெய்தால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் கொப்பரை விலை உயரும் வாய்ப்பு உள்ளது. தேங்காய் உற்பத்தியை பொறுத்தே தேங்காய் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. தென்னை விவசாயிகள் தேங்காய் விலை உயருமா? என எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story