குப்பையில் வைத்த தீயால் கருகிய தென்னை மரங்கள்


குப்பையில் வைத்த தீயால் கருகிய தென்னை மரங்கள்
x
திருப்பூர்


மடத்துக்குளத்தையடுத்த மெட்ராத்தி பகுதியில் சாலை ஓரத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.மேலும் அவ்வப்போது குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று குப்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை அதிக அளவில் இருந்ததால் பற்ற வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது.மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள தென்னந்தோப்பில் தென்னை மரங்களில் தீ பிடித்தது.இதில் தென்னை மட்டைகள் கருகிய நிலையில் அருகிலுள்ள வீடு மற்றும் மின் மாற்றிக்கு தீ பரவாத வண்ணம் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story