தேங்காய், பாக்கு ஏலம்


தேங்காய், பாக்கு ஏலம்
x
தினத்தந்தி 16 Sept 2023 2:15 AM IST (Updated: 16 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், பாக்கு ஏலம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு, வாழைத்தார் மற்றும் தேங்காய்க்கு மறைமுக ஏலம் நடைபெற்றது. 11 விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் இருந்து 39 மூட்டை தேங்காய்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். 5 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். தேங்காய் கிலோவிற்கு ரூ.15.60 முதல் ரூ.24 வரை ஏலம் சென்றது. இதேபோல் பாக்கு ஏலத்தில் 2 விவசாயிகள் 80 கிலோ பாக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதனை 3 வியாபாரிகள் கிலோ ரூ.250 முதல் ரூ.290 வரை ஏலத்தில் வாங்கி சென்றனர். வாழைத்தார் ஏலத்தில் 3 வியாபாரிகள் பூவன், ரோபஸ்டா, கதலி என 3 வகையான 21 வாழைத்தார்களை கொண்டு வந்தனர். இதை 6 வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரி செந்தில் முருகன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story