ரூ.7¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.7¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.7¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமைதோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது வழக்கம். சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.19-க்கும், சராசரியாக ரூ.78.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 749-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 10 ஆயிரத்து 550 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்தபட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் நடைபெற்றது.


Next Story