300 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள்


300 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள்
x

வேளியநல்லூரில் 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி வட்டாரத்தில் செல்வமந்தை, சிறுணமல்லி, எலத்தூர், வேளியநல்லூர், உளியநல்லூர், ஆட்டுப்பாக்கம், பின்னாவரம், மாங்காட்டுசேரி ஆகிய கிராமங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சி திட்டபணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில் நேற்று பனப்பாக்கத்தை அடுத்த வேளியநல்லூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றதலைவர் அமுதா சண்முகம் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரம்யா ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் 300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story