கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்


கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்
x

கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் தென்னை விவசாயிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் கொள்முதல் செய்து குறைந்த பட்சமாக கிலோ ரூ.40 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தென்னை விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும், தென்னை வாரியத்தின் துணை அலுவலகத்தை தமிழகத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்பது போன்ற 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவர் அப்துல் முனாப் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் மணி மாதவன், முகமது இஸ்மாயில், பழனி, கோபாலகிருஷ்ணன், தனுஸ்கோடி, ராமமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.


Related Tags :
Next Story