தேங்காய், மதிப்பூட்டப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்


தேங்காய், மதிப்பூட்டப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:46 PM GMT)

தேங்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

தேங்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியதாவது:- மாவட்டத்தில் 8,300 எக்டரில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்டபம், திருப்புல்லாணி பகுதியில் அதிகளவு தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளையும் தேங்காய்க்கு வெளிமாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.

தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேளாண்துறை சார்பில் 2 தென்னை நாற்று பண்ணைகள் உள்ளன. இங்கு மானிய விலையில் தென்னங்கன்று வழங்கப்படுகிறது. தேவையான உபகரணங்கள் இடுபொருள்கள் வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

மேலும், மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மையத்தின் மூலம் உரிய விலையில் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுகிறது. வங்கிகளில் பொருளீட்டு கடனுதவி வழங்கப்படுகிறது. சோலார் திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. தென்னை விவசாயிகள் இளநீர், தேங்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும். தென்னை கொப்பரைகளை உரிய விலைக்கு விற்பனை செய்ய மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குளிரூட்டப்பட்ட கிடங்குகளில் வைத்து பயன்பெறலாம். சேமிப்பு கிடங்கில் இருக்கும் பொழுது வங்கிகளில் இடுபொருள் கடனாக 80 சதவீதத்திற்கு மேல் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story