24 மணி நேர சேவையை தொடங்குகிறது கோவை விமான நிலையம்


24 மணி நேர சேவையை தொடங்குகிறது கோவை விமான நிலையம்
x
தினத்தந்தி 3 March 2023 12:15 AM IST (Updated: 3 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை விமான நிலையத்தில் இருந்து 27-ந் தேதி முதல் 24 மணி நேர விமான போக்குவரத்து தொடங்குகிறது.

கோயம்புத்தூர்


கோவை விமான நிலையத்தில் இருந்து 27-ந் தேதி முதல் 24 மணி நேர விமான போக்குவரத்து தொடங்குகிறது.

கோவை விமான நிலையம்

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் நாட்டிற்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமான ஓடுபாதை சீரமைப்பு பணி தொடங்கியது. அந்த பணி இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை மேற்ெகாள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விமானங்கள் இயக்குவது ரத்து செய்யப்பட் டது.

அதிகாரப்பூர்வ அனுமதி

இந்த நிலையில் ஓடுபாதை சீரமைப்பு பணி நிறைவடைந்ததால் இந்த மாதம் இறுதி முதல் மீண்டும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் விமானங்கள் இயக்க அதிகாரப்பூர்வ அனுமதி வழங் கப்பட்டு உள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஓடுபாதை சீரமைப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. இதனால் கோவை விமான நிலையத்தில் இருந்து வருகிற 27-ந் தேதி முதல் 24 மணி நேரமும் விமானங்களை இயக்க மத்திய சிவில் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் (டிஜிசிஏ) அனுமதி வழங்கி உள்ளார்.

அனைத்து நாட்களும் சேவை

27-ந் தேதி முதல் ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானம் வழக்கம் போல அதிகாலை 4.30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, மீண்டும் 5.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமா னம் 27-ந் தேதி முதல் இரவு 9.30 மணியளவில் தரை இறக்கப் பட்டு, மீண்டும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story