கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அரங்கு


கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அரங்கு
x

நாட்டிலேயே முதன் முறையாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

நாட்டிலேயே முதன் முறையாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி

கோவை வரதராஜபுரம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு 17 துறைகள் உள்பட மொத்தம் 31 மருத்துவதுறைகள் உள்ளன. மேலும் புறநோயாளிகள் பிரிவு டன், அவசர சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர், 'டீன்' ஆகியோர் இணைந்து, கல்லூரி வளாகத்தில் பிரேத பரிசோதனை அரங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை வைத்தனர்.

பிரேத பரிசோதனை அரங்கு

இதைத்தொடர்ந்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி ஆஸ் பத்திரியில், பிரேத பரிசோதனை அரங்கு அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தது.

இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் கூறியதாவது:-

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

எனவே தற்போது இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோத னை அரங்கு அமைக்கப்பட்ட உள்ளது. அது இங்கு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இங்கு கோவை மாநகரில் 7 போலீஸ் நிலையங்கள், புறநகரில் 19 போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகும் வகையில் இறப்பவர்க ளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும்.

டாக்டர்கள், உதவியாளர்கள்

இந்தியாவில் முதன்முறையாக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தான் பிரேத பரிசோதனை அரங்கு அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் சட்டம் சார்ந்த மருத்துவர்கள் 6 பேர், உதவியாளர்கள் 8 பேர் நியமிக்கப் பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story