கோவை சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தீபாவளி பண்டிகை இன்று கொகோவையில் கார் வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
தீபாவளி பண்டிகையொட்டி ஏற்கனவே பஸ்-ரெயில் நிலையங்கள், கடைவீதிகளில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடங்களில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story