கோவை - மதுரை ரெயில் சேவை தொடங்கியது


கோவை - மதுரை ரெயில் சேவை தொடங்கியது
x

15 ஆண்டுகளுக்கு பிறகு கோவை - மதுரை இடையே நேரடி ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

கோயம்புத்தூர்


15 ஆண்டுகளுக்கு பிறகு கோவை - மதுரை இடையே நேரடி ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

ரெயில்

கோவை - மதுரை இடையே கடந்த 15 ஆண்டுகளாக நேரடி ரெயில் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது மதுரை - பழனி இடையே ஒரு விரைவு சிறப்பு ரெயிலும் (06480), பழனி - கோவை இடையே ஒரு சிறப்பு ரெயிலும் (06462) தனித்தனியாக இயக்கப் பட்டு வந்தது.

தற்போது இந்த சிறப்பு ரெயில்கள் ஒரே ரெயிலாக மாற்றப்பட்டு நேற்று முதல் இயக்கப்பட்டது. அதன்படி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் மதுரைக்கு புறப்பட்ட ரெயில் முன் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இந்த ரெயில் புறப்பட்ட போது அதில் இருந்த பயணிகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

கோவை - மதுரை

இது போல் மதுரை - கோவை விரைவு ரெயில் (16722) மதுரையில் இருந்து நேற்று காலை 7.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு கோவை வந்தடைந்தது.

மறு மார்க்கத்தில் கோவை - மதுரை விரைவு ரெயில் (16721) கோவையில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டது.

இதன் மூலம் மதுரை -கோவை விரைவு ரெயிலின் பயண நேரம் 30 நிமிடம் குறைக்கப்பட்டு உள்ளது.

நின்று செல்லும் நிலையங்கள்

இந்த ரெயில்கள் கூடல்நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட் டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டணம் குறைவு

இந்த ரெயிலில் கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.90-ம், கோவையில் இருந்து பழனி செல்ல ரூ.55-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால் கோவையில் இருந்து மதுரைக்கு பஸ்சில் செல்ல ரூ.175 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்சில் செல்வதை விட ரெயிலில் கட்டணம் குறைவாக இருப்பதால் ரெயிலில் பயணம் செய்யவே விரும்புவதாக பயணிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story